துபாயிலிருந்து லிபியா சென்று மதுரை வந்த சென்னை வாலிபர் மதுரை விமான நிலையத்தில் கைது.

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த வாலிபரை மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பிரவின் என்பவரது பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான லிபியா சென்று வந்தது தெரிய வந்தது, பிரவின் கடந்த 2017ஆம் ஆண்டு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு 2019ல் துபாயில் இருந்து லிபியா சென்றுள்ளார் லிபியாவில் இருந்து தற்பொழுது துபாய் மூலமாக மதுரை வந்ததால் சந்தேகமடைந்த குடியேற்ற துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விதிக்ப்பட்ட தடையை மீறி லிபியா சென்று வந்தது உறுதி செய்யப்பட்டதால் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ஜவகர் நகரை சேர்ந்த நாராயணன் மகன் பிரவீன் (வயது 26) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!