நான்கு மாசிவீதிகளில் பக்தர்களால் இழுத்து வரவேண்டிய திருத்தேர்கள் கொரானா ஊரடங்கால் கோவில் வளாகத்திலேயே சட்டத்தேரில் வலம் வந்தஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரானா அச்சுறுத்தலால் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று கோவில் வளாகத்திலேயே பொதுமக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

சித்திரைதிருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருக்கல்யாணத்தை அடுத்து இன்று நான்கு மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பக்தர்களால் இழுத்து வர வேண்டிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சுவாமிகளின் திருத்தேர் கள் இன்று வரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே கோவில் அலுவலர்கள் ஊழியர்களால் சட்டத் தேர்களாக இழுத்து வரப்பட்டது.வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட சட்டதேர்களில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை வலம் வந்து அருள்பாலித்தார்.இதற்கு பொதுமக்களுக்கு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் இணையதளம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!