திருமணம் நிச்சயித்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவருக்கு வலைவீச்சு.

திருமணம் நிச்சயித்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையை சேர்ந்தவர் பாலாஜி. இவர் மதுரை எம்.கே.புரத்தைசேர்ந்தபெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.அவரது காதலை அந்த பெண் மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அதனால் ஆத்திரமடைந்த பாலாஜி அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவதூறாகவெளியிட்டு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையை சேர்ந்த பாலாஜியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!