உலகநாடுகள் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கவிற்குட்பட்ட தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நுரையீரல் மருத்துவமனையில் கொரானா கேர் சென்டராக மீண்டும் இயங்கி வருகிறது.கொரான தொற்றால் பாதிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றனர், இன்று மட்டும் 26 ஆண்கள்,10 பெண்கள் உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாகவும், 13 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உள்பட 20 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்,தற்போது வரை 166 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாக மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை முதன்மை மருத்துவர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.