தமிழ்நாடு வேளாண் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் .

தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் பிரதி வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகின்றது. இன்று (22.04.2021) பகல் 12 மணிக்கு ஏலம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஏலத்தில் 4 விவசாயிகளின் 12200 தேங்காய்கள் 5 குவியலாக மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது.இன்று நடந்த ஏலத்தில் சோழவந்தான் வியாபாரி உட்பட5 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 16.20 க்கும் குறைந்த பட்சமாக ரூ 11.50க்கும் சராசரியாக ரூ 14.09க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூபாய் 1.59 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது. மேலும் தகவல் அறிய மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் கருப்பையா 99940965965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!