மதுரையில் தொல். திருமாவளவன் பேட்டி

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து அரக்கோணத்தில் இரட்டை சாதிவெறியர்களால் நடத்தப்பட்டது அந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியதுபாதிக்கப்பட்ட குடும்பத்தினிடம் அனுமதி பெறாமல் சம்பந்தமில்லாத நபரிடம் சவுந்தரராஜனிடம் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.உடனடியாக புலனாய்வு விசாரணை தொடங்க வேண்டும்.எனவே இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரிப்பதில் நீதிநியாயம் கிடைக்காது.எனவே மத்திய அரசின் புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும்.இது திட்டமிட்ட சாதிய படுகொலை, அதற்கு இந்த தேர்தல் குறிப்பாக விசிக பானை சின்னத்தில் வாக்கு சேகரித்த நடவடிக்கை காரணியாக அமைகிறது.வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்உரிய நிவாரணம் வழங்குவதோடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படகூடாத வகையில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், பிற மாநிலங்களில் கூட கண்காணிப்பு குழு செயல்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் தவிர்க்கப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய படுகொலை அதிகம் நடக்கிறது.பாமக கட்சி சாதிய வன்கொடுமையைகூர்நோக்குவதில் குறியாக இருக்கிறது.விசிக கட்சியை பற்றி தவறாக சித்தரிப்பதும் சமூக வலைதளங்களில் அவதூறு பேசுவதும் நீடிக்கிறது.தொடர்ந்து அவதூறு பேசுவதை சலித்துகொள்ள முடியாது. சட்டரீதியாக எதிர்கொள்வோம், அநாகரிகமாக நடந்துகொள்வதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. பாமக கட்சி இதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.உலகிலேயே இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கபட்டு இப்போது பற்றாக்குறை ஏற்படும். நிலை உள்ளது.இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்கவேண்டும்.நேற்றைய உரை பொதுமக்களுக்கு அலங்கார உரையாக தான் இருந்தது.போர்க்கால அடிப்படையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முகவர்களுக்குமுறையான தகவல்களை தரவேண்டும்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!