அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தக் கொரோனா தொற்றால் கொள்ளையடிக்கப்பட்ட காலங்களை மீட்டுக் கொடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கவிஞர் வைரமுத்து சிறப்புரை.*மதுரையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து சிறப்புரையாற்றினார்.அப்போது பூஜ்ஜியம் என்பது சாதாரண இலக்கு அல்ல பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு என்பது தான் இந்தியாவிற்கு பெருமை எனவும்.மனித குல வரலாற்றில் ஒரு விடுபடுதல் நடைபெற்று வருகிறது இந்தக் கொரோனா தொற்றால் சரித்திரத்திலேயே ஒரு ஆண்டையே விடுபட செய்துள்ளது எனக் கூறினார்.இந்த தொற்று நோயால் 172 நாடுகளில் 100 கோடி மாணவர்கள் கல்வி இணைந்து உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.இந்த 100 கோடி மாணவர்களால் நாளைய எதிர்காலம் எத்தனை அறிவியல் அறிஞர்களை இந்த சமூகத்தை விட்டு ஒதுங்கி உள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாது எனக் கூறினார்.உலகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தக் கொரோனா தொற்றால் கொள்ளையடிக்கப்பட்ட காலங்களை மீட்டுக் கொடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.ஒரு கல்வி நிறுவனம் இந்த இழந்த நாட்களை அறிவாற்றலால் மாணவர்களுக்கு மீட்டுக் கொடுத்தாள் அப்போதுதான் ஒரு கல்வி சர்வதேச ஆற்றலைப் பெறும் என கூறினார்.அனைத்து மனிதனும் வெளியே மனிதத் தோல் கொண்டவனாக இருந்தாலும் மனதளவில் மிருகத் தோல் கொண்டவனாக உள்ளான் அவனை கல்விதான் மாற்றுகிறது என அவர் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.