தென்காசி மாவட்டம் சுரண்டையில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் சார்பில் ஒரு வருடம் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திர மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுரண்டை, வீரகேரளம்புதூர், சாம்பவர்வடகரை, திருச்சிற்றம்பலம் ஆகிய மையங்களில் இருந்து தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 90 மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவை அனிதா செந்தில்குமார் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விவேகானந்த கேந்திரம் மாவட்ட இணைப்பாளரும் பாரத் மாதா கல்வி நிலையை இயக்குநருமான வேல்ராஜ் வரவேற்று பேசினார். விழாவிற்கு விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். தையல் பயிற்சி ஆசிரியைகள் நேசம் கருப்பசாமி, செல்வகுமாரி, முருகேஸ்வரி, மாரியம்மாள், சுதா ஆகியோர் தையல் பயிற்சி அறிக்கை வாசித்தனர் தமிழரசி ஐயப்பன், விவேகானந்த கேந்திர கீழப்பாவூர் ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், அழகர், கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விவேகானந்த கேந்திர மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தொகுத்து வழங்கினார். தேவி முருகேசபாரதி, செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர பொறுப்பாளர்கள், கேந்திர ஆசிரியைர்கள் மஞ்சு, அனுசியா, விஜி, பார்வதி,சீனு மற்றும் சமயவகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக விவேகானந்த கேந்திரத்தின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.