மதுரை புதூர் அழகர்கோயில் சாலை சூர்யா நகரில் வீரத்தாய் வேலுநாச்சியார் பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது வீரத்தாய் வேலுநாச்சியார் பேரவை மாநில பொதுச் செயலாளர் குமாரம் முனைவர் எஸ் வசந்தகுமார் பொதுமக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வழங்கினார் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார் வீரத்தாய் வேலுநாச்சியார் பேரவையின் மாநில இளைஞரணிச் செயலர் தம்பி மு மீனாட்சி சுந்தரம் மகளிர் அணி நிர்வாகிகள் அர்ச்சனா, முத்தமிழ், செல்வி மற்றும் பேரவை நிர்வாகிகள், மகளிர் அணியினர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர் பின்னர் சூரியா நகர் சாலையில் மரக்கன்றுகளை நடும் விழாவில் பொதுச்செயலர் வசந்தகுமார் இளைஞரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் மரக்கன்றுகளை நட்டனர்.கபசுரக் குடிநீர் வழங்கினர்கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தனிமனித இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் வழங்கினார் பொதுச்செயலர் வசந்தகுமார், இளைஞரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.