மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளராக அரசு என்பவர் உள்ளார். இவரது அலுவலகத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியின் போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியியலாளர் அரசு அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.இதனை தொடர்ந்து மாநகராட்சி தலைமை பொறியாளர் அரசு மற்றும் அவரது உதவி பொறியாளர் மனோகரன் ஆகிய இருவரையும் ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு மாற்றி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி தமிழக அரசின் இட மாறுதலுக்கான உத்தரவை இடை கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் மனு குறித்து தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.தித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.