உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்மவாகனம்,அன்ன வாகனம், தங்க குதிரை வாகனத்தில் என எழுந்தருளி கோவில் ஆடி வீதிகளில் பவனி வருகின்றனர்.இந்தநிலையில் ஆறாம் நாளான இன்று பிரியாவிடை அம்மனுடன், சுந்தரேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சிஅம்மன் தனியே வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் பவனி வந்தனர்.முன்னதாக சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேஷ பூஜைகள் செய்யப்பட்டன. கொரானா எதிரொலியாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் நிகழ்ச்சிகளை இணையதளத்தில் மட்டும் பார்க்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்து கோவில் இணையதளம் மற்றும் யூ – டியுப்பில் நேரலை செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.