மருத்துவம், சுகாதாரம் வியாபாரிகள் என அனைவருக்குமே காவல்துறையினர் ஊரடங்கு விதியை சமமாக விதிக்க வேண்டும்.கடந்த முறை கொரான ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு விட்டோம்.அதனால் அரசு வியாபாரிகளிடம் ஆலோசளை செய்த பிறகு ஊரடங்கு குறித்து திட்டம் வகுத்தால் நல்லது.-மதுரை நுகர்பொருள் மற்றும் மொத்த வியாபாரிகள் கோரிக்கை.மதுரை மாவட்ட நுகர்பொருள் மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் மற்றும் பதவியேற்பு விழா நடைபெற்றது.கடந்த 20 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் நுகர்பொருள் வியாபாரியே மிகவும் ஆர்வமாக காணப்பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 10 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்களித்தனர்.அதில் ஏற்கனவே தலைவராக இருக்கும் கீழமாசி வீதி, குமரன் ஸ்டோர் உரிமையாளர் திரு.குற்றாலிங்கம் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:காவல்துறை சுகாதாரத்துறைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவு துறைக்கு கொடுக்கவில்லை.அதனால் மக்களுக்கு சரக்கு போய் சேர்வதில்லை. புறநானூறு டங்கு காலத்தில் தளர்வுகளாக குறுகிய காலம் அவகாசம் கொடுப்பதால் மக்கள் அதிகமாக சரக்குகளை வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் மக்களுக்கும் எங்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. |காவல்துறையினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வணிக கடைகளை அடைக்க வேண்டும் என்கிறார்கள்.அதனால் அனைவருமே ஒரே நேரத்திற்குள் பொருட்கள் வாங்க குவிவதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய தளர்வுகள் கொடுத்தாள் சரியாக இருக்கும்.மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றிற்கு காவல்துறையினர் அளிக்கும் முக்கியத்துவத்தை வியாபாரிகளுக்கு வழங்குவது இல்லை.அனைவருக்குமே நடைமுறை விதிகள் சமமாக விதிக்க வேண்டும்.கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நுகர் பொருள் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு விட்டோம். அதனால் அரசு வியாபாரிகளிடம் ஆலோசனை கேட்டுவிட்டு பிறகு திட்டம் வகுத்தால் நல்லது.கலப்படம் என்பது வேறு தரக் குறைவு என்பது வேறு. கலப்படம் என்பது இரண்டு பொருட்களை சேர்ப்பது தரக்குறைவு என்பது இயற்கையிலேயே வருவது விவசாயிகளிடமிருந்து மூன்றாக பிரித்து வருவது.ஆனால் இரண்டிற்குமே ஒரு லட்சம் அபராதம் ஒரு மாதம் ஜெயில் தண்டனை என்று சட்டம் கூறுகிறது.பிக் பஜாரோ. டீ மார்ட்டோ, ரிலையன்ஸ் பிரஷ்ஷோ போன்ற நிறுவனங்களுக்கு . இது பொருந்தாது.ஆனால் சிறு வணிகத்திற்கு தரக்குறைவு என்கிறார்கள். கலப்படம் சம்பந்தமான தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் தரக்குறைவு என்பது வணிகர்கள் பொறுப்பல்ல. தரக்குறைவு என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.ஒட்டுமொத்தமாக தரக்குறைவு என்று அபராதம் ஜெயில் தண்டனை என்றால் வியாபாரம் செய்ய எங்களால் முடியாது. எனவே இந்த இரண்டு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் எங்களுக்கும் வியாபாரம் சுமுகமாக நடக்கும் என்றனர்.பேட்டிகுற்ற லிங்கம்,மதுரை மாவட்ட நுகர்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.