குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க சென்று வீட்டில் நகை பணம் கொள்ளை.

மதுரை திருநகரில் குடும்பத்துடன் படம் பார்க்கச் சென்ற நபரின் வீடுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 27 பவுன் நகை மற்றும் 36 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருநகர் காந்தி ஜி இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் வெண்ணிமலை தேவர் என்பவரது மகன் பெரியசாமி வயது 64 இவர் இவர் தமிழ்நாடு போக்குவரத்து கலக்கத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவர் நேற்று தனது குடும்பத்துடன் அருகில் உள்ள திரையரங்கிற்க்கு படம் பாக்க வீட்டின் வெளி கதவுகளை மட்டும் பூட்டிவிட்டு படம் பார்க்க சென்றுள்ளார் இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து 27 பவுன் தங்க நகை மற்றும்36000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கொள்ளை குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!