நடிகர் விவேக்கின் மறைவையொட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்ட திருநகர் இளைஞர்கள் .

நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்படும் பத்மஸ்ரீ டாக்டர் விவேக் நேற்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகினர், அவர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் _ திருப்பரங்குன்றம் திருநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக திருநகர் பகுதியில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்..மேலும் நடிகர் விவேக் தன் வாழ்நாளில் ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்று முயற்சி செய்து 30 லட்சம் மரக்கன்றுகள் வரை நட்டார் அடுத்த 6 மாதங்களில் எங்களால் முடிந்த அளவு மரக்கன்றுகளை மீதமுள்ள 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முயற்சிப்போம் என்றனர்.தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும் மரக்கன்றுகள் நடுமாறு வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!