நடிகர் விவேக் படித்த அமெரிக்கன் கல்லூரியில், கல்லூரி முதல்வர் அவரது கல்லூரி நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்:

மறைந்த நடிகர் விவேக் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1978 –1981 ஆண்டு காமர்ஸ் பிரிவில் படித்தார். இதையடுத்து நாடக நடிகர், சினிமாவில் நடித்து மிகப்பெரும் நடிகராக உருவாகி தனது சிந்தனைநிறைந்த நகைச்சுவையால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகர் விவேக் இன்று அதிகாலை இயற்கை எய்திய நிலையில் அவர் கல்லூரி படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் பேராசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் கிறிஸ்டோபர் பேசுகையில் :எங்கள் கல்லூரி மாணவரான விவேக் மறைவு ஈடுசெய்ய இயலாதது அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் நட்டுவைத்த மரங்களில் காற்றாக வாழ்ந்து கல்லூரியில் நினைவாக இருப்பார் என்றார்.இதேபோல் அவரது கல்லூரி நண்பர் பேசுகையில் :நண்பனின் இழப்பு ஏற்கமுடியவில்லை, சினிமா இயக்குனராக வருவார் என எதிர்ப்பார்த்தோம், ஆனால் இவ்வளவு விரைவாக தனது வாழ்வை முடிப்பார் என்பதை ஏற்க இயலவில்லை என்றர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!