கொரான எதிர்பு உறுதி மொழியுடன் ” புத்தாண்டை, “வரவேற்ற யோகா மாணவர்கள் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் சல்மான்கான், அசாருதீன் சகோதரர்கள். இவர்கள் சிறுவயது முதலே யோகா மற்றும் சிலம்பாட்ட போட்டிகளில் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளனர்.இன்று பிறக்கும் சித்திரை பிலவ தமிழ் “புத்தாண்டை ” வரவேற்கும் விதமாக கொரானவை ஒழிப்போம் பாதுகாப்புடன் இருப்போம் எனக்கூறி யோகாசனம் மற்றும் சிலம்பத்தில் தங்கள் மாணவர்களுடன் யோக பயிற்சிகள், சிலம்பத்தில் தற்காப்பு, மற்றும் அலங்கார சிலம்பம் விளையாட்டை மாணவர்கள் தாங்கள் கைவண்ணத்தைக் காட்டினர்.கொரானவை ஒழிப்போம். பாதுகாப்புடன் இருப்போம் .முக கவசம் அணிவோம் .சமூக இடைவெளியுடன் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து சித்திரை முதல் நாளான இன்று “பிலவ” தமிழ் புத்தாண்டை வரவேற்றது கொரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!