மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ரெங்கராஜபுரம் கிராமத்திற்கு சொந்தமான மயானத்தை பொதுப்பணித்துறையினர் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரெங்கராஜபுரம் கிராமத்திற்கு சொந்தமான மயானம் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் பூதகுடி பிரிவு அருகே மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த மயானம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி பொதுப்பணித்துறையினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் இந்த மயானத்தை காலி செய்து தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுப்பணித் துறையினர் மீது குற்றம் சாட்டி கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனம் இந்த இடத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக இடத்தை கையகப்படுத்த முயற்சி செய்கிறது எனவும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும் மதுரை வடக்கு தாசில்தார் விஜயமுத்துக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இந்த மயானம் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் இதனை பொதுப்பணித்துறையினர் அகற்ற மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை அலங்காநல்லூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடக்கின்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் பேருந்துகள் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!