காமராஜர் பல்கலைகழகதினக்கூலி பணியாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும் – டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கோரிக்கை.

மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைகழக உயர்நிலை & கடைநிலை பணியாளர் நலச்சங்கத்தின் சார்பாக கருத்தரங்கு செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைவேந்தர் கிருஷ்ணன் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து காமராசர் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மற்றும் 8 தினக்கூலி பணியாளர்களை பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பதிவாளர் வசந்தா, பேராசிரியர்கள் பாரி பரமேஸ்வரன், தீதையாளன் உட்பட பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!