தமிழகத்திலேயே பிளாட்பாரம் இல்லாத ரயில் நிலையம் பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு பிளாட்பாரம் கட்டும் பணி தீவிரம்.

திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையத்தில் அனைத்து பாசஞ்சர் ரயில்களும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்லும். இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தில் இரணடு நடௌமேடைகள் இருந்தது. ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பாலம் இல்லாமல இருந்தது. இதனால் பயணிகள்,ரயில்வே ஊழியர்கள் உட்பட அனைவரும் தண்டவாளத்தை கடந்து மட்டுமே மற்றொரு நடைமேடைக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவங்களும் நடந்தது. எனவே பல்வேறு தரப்பினரும் இந்த ரயில் நிலையத்தில் இரண்டு நடை மேடைகளையும் இணைக்கும் விதமாக நடை மேடை மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போதைய விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் ரயில்வே அமைச்சகத்திடம் நடைமேடை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து தற்போது நடைமேடை மேம்பாலம் அமைக்க முதற்கட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் துவங்கியுள்ளது. இந்த பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்க்குள் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!