மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது கோவிட் தடுப்பு பாதுகாப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறையினர் நோட்டீஸ்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் தீவிர கொரான பாதுகாப்பு சோதனை மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு அவர்களுடன் வருகை தந்த பார்வையாளர்களுக்கும் அபதாரம் விதிப்பு .மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஊழிர்கள், மற்றும் நிர்வாகிகள் முக கவசம், மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி பயணிகளை கையாள்வது குறித்து புகார் எழுந்தது.இதனையடுத்து மதுரை மாவட்ட கொரான தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் சந்திமோகன் இன்று விமான நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை விமான பயணியிடம் கொரான குறித்த விழிப்புணர்வு இல்லாமல் கையாள்வது தெரிந்தது. இதனையடுத்து Dr.சந்திரமோகன் IAS பரிந்துரையின் பேரில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அர்ஜூன்குமார் உத்திரவின் பேரில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன மேலாளர் மகேஸிடம் சுகாதாரத் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தின் வளாகத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளருக்கு உத்தரவிட்டார். அவரின், அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி ஸ்பைஸ் ஜெட் நிறுவன மேலாளரிடம் நோட்டிஸ் வழங்கினார்.மேலும் 20 பேர் கொண்ட சுகாதார குழுவினர் விமான நிலைய வளாக பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிறுவனங்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கொரான தடுப்பு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம் கொரானா தொற்று குறித்தும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதோடு, மதுரை விமானநிலையத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராத விதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!