வருகின்ற திங்கள்கிழமை 12-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டும் மொத்த காய் – கறி வியபாரம் நடைபெற வேண்டும்.வியபாரிகள் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக கொரானா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.விரைவில் மொத்த வியபாரம் மாங்காய் மண்டி அருகிலும் மற்றும் சில்லறை வியபாரம் வெங்கடேஸ்வர பள்ளி மைதானத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.காய்கறி மொத்த வியாபாரம் செய்வோர் கண்டிப்பாக சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து கமிஷன் வியாபரம் செய்பவர்கள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்பவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவார்கள்.சாலையில் முக கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடாத வணிக நிறுவனங்கள் தெரழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதுதொற்று பரவும் வகையில் அதிக நபர்களை சேர்க்க கூடாது,உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்து உள்ளார்.


You must be logged in to post a comment.