மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக ஆணையர் விசாகன் தகவல் தெரிவித்துள்ளார்.20 வார்டுகளில் இன்று முதல் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்.மேலும் , கொரோனா பரவல் அதிகரித்த தெருக்கள் மூடப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும்….மதுரையில் இரண்டாம் கட்ட கொரனோ மீண்டும் பரவதால் மதுரை மாநகராட்சி கொரனோவால் பாதிக்க பட்ட விளங்குடி கணபதி நகர் முதல் தெருவில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரனோ இருப்பதை கண்டவுடன் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளுக்கு சென்று உடனடியாக அந்த தெருவை தடுப்பு வைத்து அடைத்த போது எடுத்த படம்….
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.