யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு.

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க கோரி சமூக ஆர்வலரும் முடிதிருத்தும் தொழிலாளியான மோகன் பேட்டிமடோன் அஸ்வின் இயக்கத்தில் சஷிகாந்த் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் கடந்த 6ந்தேதி முதல் திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது.இன்றைய அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் யோகிபாபு முடிதிருத்தும் தொழிலாளியாக நடித்து இருக்கிறார்.மேலும் இப்படத்தில் யோகிபாபுவின் ஒரு வாக்கிற்காக இரு அரசியல் கட்சிகள் அவரை தாங்குவதும் ஒருசில காட்சிகளில் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையிலும் மனதை புண்படுத்தும் வகையில் செருப்பால் அடிப்பது, காலால் மிதித்து காயப்படுத்துவது, கழிவறைகளை சுத்தம் செய்வதற்குதான் லாயக்கு போன்ற வசனங்கள் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இத்திரைப்படத்தை கண்ட மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலரும் முடிதிருத்தும் தொழிலாளியான மதுரை அண்ணாநகர் மேலமடை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன், உடனடியாக இப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளோம் என்று கூறினார்.மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு மலேசியாவில் உள்ள ஒரு அமைப்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.மேலும் மோகன் என்பவர் கொரானா காலத்தில் தனது மகளின் படிப்பு செலவிற்காக இருந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து பிரதமரால் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!