அதில், “நான் பட்டயபடிப்பு தொடக்க கல்வி (Dip in Elementary Education Course) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பட்டயபடிப்பு தொடக்க கல்வி அதிக அளவில் பெண்களை படித்து வருகிறோம். எனவே, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சரியாக வகுப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் வகுப்புகளுக்கு சரியாக செல்ல முடியாமல் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிப்படைந்து இருந்தோம்.இந்த நிலையில் எங்களுக்கு செப்டம்பர் 2020 தேர்வு நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வந்த நேரம் என்பதால் தேர்வுக்கு செல்வதிலிருந்து மீண்டும் வீடுகளுக்கு வரும் வரை உடலளவிலும், மனதளவிலும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. பட்டயபடிப்பு தொடக்க கல்வி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிந்து தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதும் 98.5% மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை, இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் இணையதளம் மூலமாக அல்லது மறு தேர்வு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு.” என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.ர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.