மதுரை விமான நிலைய இயக்குனர் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூருக்கு மாற்றம்.

மதுரை விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வருபவர் செந்தில் வளவன் இவர்இணை பொது மேலாளராக பதவி வகித்து வருகிறார்.இவருக்கு தற்போது பொது மேலாளராக பணி உயர்வு வழங்கப்பட்டு கோயம்புத்தூர் விமானநிலைய இயக்குனராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக மேற்கு மண்டலத்தில் மும்பையில் பணியாற்றி வரும் பாபுராஜ் என்பவர் மதுரை விமான நிலையஇயக்குனர் பணியிடத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும் தற்பொழுது பணியாற்றிவரும் செந்தில் வளவன் ஜூலை மாதம் வரை இப்பணியினை தொடர்வார் அதன் பின்னரே கோயம்புத்தூர் செல்கிறார் * செந்தில் வளவன் மதுரையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால் மதுரை விமானநிலையத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை அதிக அக்கறையுடன முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!