வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம் – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை 234 தொகுதிகளுக்கு தேர்தல் நாளை நடைபெற உள்ளது.இதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை துணை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை வடக்கு மேற்கு தெற்கு கிழக்கு மத்திய தொகுதி சோழவந்தான் உசிலம்பட்டி மேலூர் திருமங்கலம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாகனங்களில் அனுப்பும் பணி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!