வீட்டிற்கு மா்ம நபா்கள் தீவைப்பு

திருப்பரங்குன்றம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முனியசாமி இவரது மகன் ரமேஷ் பாண்டி (வயது 36 )இவர் திருமணமாகி மனைவி மகனுடன் மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.சொந்தமாக இரு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காலை ஒரு 6 மணியளவில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் பாட்டில் மூலம் வீட்டில் வீசி எறிந்தனர் அது வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து தீப்பற்றி எரிந்தது.இதுகுறித்து அவனியாபுரம் போலீசாரிடம் புகார் செய்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர் மற்றும் முன்விரோதம் காரணமாக மண்ணெண்ணய் குண்டு வீச்சு நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!