சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் திமுக வினர் மனு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினரின் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் மாணிக்கம் அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி தட்டுடன் நிற்கும் பெண்களுக்கு ரூபாய் 200 வீதம் வழங்கியது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் அணி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். அதனடிப்படையில் சோழவந்தான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி கரட்டுப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், அதனை உடனடியாக கருத்தில் கொண்டு இரு விஷயங்களை ஒப்பிட்டு சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் மேலும் கூறும்போது திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதிமுக வினர் பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!