பிரச்சாரம் மேற்கொள்ள இன்னும் இரண்டு தினங்களே உள்ளதால் தொகுதி முழுவதும் இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, அதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு தினங்களே உள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் மதுரை அமமுக – எஸ்டிபிஐ கூட்டணியில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்த பிரசார வாகன பேரணியானது மதுரையில் உள்ள பழங்காநத்தம் சுற்றுசாலையில் துவங்கி எல்லீஸ் நகர், மகபூப்பாளையம், எஸ்,எஸ் காலனி, அரசரடி, ஆரப்பாளையம் சிம்மக்கல், கிரைம்பிராஞ்சு வரையில் இருசக்கர வாகனத்தில் சென்றவாரு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!