கழகங்கள் இரண்டும் வழங்காத வாக்குறுதி ஒன்றே ஒன்றுதான் பொண்ணு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து, முதலிரவு நடத்தி வைப்பது மட்டும்தான் என ராதிகா குற்றச்சாட்டு.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராதிகா மதுரை புதூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டனர் அப்போது நடிகை ராதிகா பேசியதாவது, சில கட்சிகள் கருத்துக்கணிப்பு நமக்கு சாதகமாக இருக்கிறது என பேசிக்கொள்கின்றனர் உண்மையில் கருத்துக்கணிப்புகள் உண்மை அல்ல காசு யாரு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாகவே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன என குற்றஞ்சாட்டினார். மேலும் இரண்டு கழகங்களும் தேர்தலில் வெற்றி பெற்றால் பங்கு போட்டுக் கொள்வதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இவர்கள் கையில் நாட்டை கொடுத்தால் உருப்படுமா என கேள்வி எழுப்பினார். அஞ்சாநெஞ்சன் ஒருவரே அனைவருக்கும் போன் செய்து சொல்கிறார் திமுக வரக்கூடாது என, அவர் ஒருவரே போதும். அதேபோல செல்வி ஜெயலலிதா தலைமை இல்லாமல் அதிமுக திண்டாடி கொண்டிருக்கிறது அவர்கள் வெற்றி பெறுவதற்கு எல்லா வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்கள் கொடுக்காத வாக்குறுதி என்னவென்றால் பெண் மாப்பிள்ளை தேடித் தருவது மட்டும்தான்கொஞ்சம் விட்டால் பொண்ணு மாப்பிள்ளை தேடி தருவது முதல் முதலிரவு வரை ஏற்பாடு செய்வார்கள். கமலஹாசன் அவர்கள் சொந்த உழைப்பால் முன்னேறியவர். சினிமாவிற்காக நிறையச் செய்திருக்கிறார். இன்று பொது வாழ்விற்கு எதற்காக வந்தார் என்றால் உங்களுக்காக ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாங்கள் வியாபாரிகள் அல்ல இப்பொழுது அறிவித்துள்ள அறிவிப்புகள் யாராலும் செய்ய முடியாது. அடுத்து ஆட்சிக்கு வருபவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவர். எனவே நீங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் இல்லாவிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும். மதுரை காரர்களுக்கு ஒரு துணிச்சல் உண்டு நம்மை எதுவும் தாக்காது என்று , கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!