இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தென் மாவட்ட சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை ரயில்கள் தாமதம் பயணிகள் கடும் அவதி .

மதுரைதிருமங்கலம் – துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. கணினிமயமாக்கப் பட்ட நிலையில் தற்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாமதம் என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருமங்கலம் – துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்பு பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது வரை மின்னணு அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்று வந்தது. தற்போது ரயில் இயக்கம் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. கணினி மயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு ரயில்கள் ஆகியவை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் கொல்லம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர், சிறப்பு ரயில்கள் மற்றும் கோவை – நாகர்கோவில் பெங்களூர் – நாகர்கோவில் டெல்லி நிஜாமுதீன் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் 7 மணி நேரமாக நிறுத்தப்பட்ட கொல்லம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சமயநல்லூரில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது… பயணிகளின் உறவினர்கள் மதுரை ரயில் நிலையத்தில் குவிய துவங்கினர் உரிய நேரத்தில் உதவிய தமிழ்நாடு ரயில்வே காவல் போலீசார் மதுரை ரயில்வே காவல்துறையினர் சமயநல்லூர் மற்றும் சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருந்தபோது நிறுத்தப்பட்டது அவரது உறவினர்கள் காவல்துறையினர் தொலைபேசி வாயிலாக தங்கள் உறவினர்கள் அங்கே உள்ளார்கள் உணவு உள்ளிட்ட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் என தெரிவித்தனர் உடனடியாக சம்பந்தப்பட்ட ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு தொலைபேசி எண்ணை கொடுத்து அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய மதுரை ரயில்வே காவல்துறையினர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!