கீழை நியூஸ் செய்தி எதிரொலி பசு மாடுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மதுரை புதூர் சூர்யா நகரில்ஆசிட்(ரசாயன திரவம்) வீச்சால் காயமுற்ற மாடுகள் பற்றி செய்தி நமது கீழை நியூஸ் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தோம் இதன் எதிரொலியாக ஊர்வனம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் முயற்சியுடன் ஒரே ஒரு காளை மாட்டை 2மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு தல்லாகுளம் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த மீட்பு பணியில் 10 மேற்பட்ட ஊரவனம் விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் துணையுடன்  போராடி பிடிக்கப்பட்ட காளை மாட்டிற்கு, தல்லாகுளம் அரசு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் ரசாயன திரவ வீச்சுக்கு ஆளாகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மாடுகளை மீட்டு கோ சாலையில் சேர்த்து மேல்சிகிச்சை அளிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் மற்றும்..ஊரவனம் விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பினருக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!