புத்துணர்வு முகாமிற்கு சென்ற கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி யானை அழகர்கோவில் வந்தடைந்தது.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தரவல்லி எனும் யானை புத்துணர்வு முகாமிற்கு சென்று இமற்று அதிகாலை கோவில் திரும்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி கோவிலிலிருந்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகைக்கு லாரி மூலம் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்துணர்வு முகாமிற்கு சென்றது. தொடர்ந்து அங்கு 48 நாட்கள் தங்கியது. இந்நிலையில் முகாம் முடிந்து நேற்று இரவு சுந்தரவல்லி யானை லாரி மூலமாக 287 கிலோ மீட்டர், சுமார் 6 மணி நேரம் பயணம் செய்து இன்று அதிகாலை அழகர்கோவில் வந்தடைந்தது. முகாமிற்கு சென்று வந்த சுந்தரவல்லி யானை தன் இருப்பிடம் வந்ததை அறிந்து மிகுந்த உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுகிறது.படவிளக்கம்புத்துணர்வு முகாமிற்கு சென்ற கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி யானை அழகர்கோவில் வந்தடைந்தது…

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!