மதுரை அருகே 4 வயது சிறுவனை சூடுவைத்து சித்ரவதை செய்த தாய்மற்றும் வளர்ப்புத்தந்தையைபோலீசார் கைது செய்தனர்.மதுரை சமயநல்லூர் ஊர்மெச்சிகுளம் குளம் சின்னையா கோவில் தெருவை சேர்ந்தவர் சுகன்யா 20. இவருடைய கணவர் முருகன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.மகளை உறவினர்கள் வளர்ப்பதாக அழைத்துச் சென்றுவிட்டனர். 4 வயது மகன் விஜய கிருஷ்ணன் மட்டும்தாய் சுகன்யாவிடம் இருந்து வந்த நிலையில் சுகன்யாவுக்கு உறவினர் கஜேந்திரனுக்கும்இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது.அவர் குடித்துவிட்டு வந்து சிறுவன் விஜய்கிருஷ்ணனை அடித்து சூடுவைத்து தொந்தரவு செய்து இருக்கிறார். இதற்கு தாய் சுகன்யாவும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த விஜயகிருஷ்ணனை இருவரும் அடித்து இழுத்து வந்த போது கதறி அழுத சிறுவன் பக்கத்தில் இருந்தவரிடம் ஓடிச்சென்று கதறியிருக்கிறான். அவர்கள் உடனடியாக சமயநல்லூர் போலீசுக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர் .இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை சித்திரவதை செய்த தாய் சுகன்யாவையும் அவரது இரண்டாவது கணவர் கஜேந்திரனையும் கைது செய்தனர். சூடு மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனை கருமாத்தூரில் உள்ள சிறுவர் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.