மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் நடந்தவிபத்தில் இரண்டுபேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சோமநாத மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் 48. இவர் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் .இவர் வரிச்சியூர் அருகே வந்தபோது குறுக்கே சென்ற நாய் மீது மோதி தலைகுப்புற கீழே விழுந்தார்.இந்த விபத்தில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…..மற்றொரு விபத்து மதுரை மக்கள்திருமங்கலம் திரளி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன் பிச்சைமுத்து 19 .இவர் திருமங்கலத்திலிருந்து டி. கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துவேல் 46 என்பவரை கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.