திருப்பரங்குன்றம் தொகுதி கல்லூரி மாணவர்கள்அதிமுகவிற்கு ஆதரவாக பதாகைகளுடன் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.இதேபோல் அமமுக டிடிவி தினகரன் கட்சியினர் சுரேஷ் தலைமையிலும் மற்றும் புதிய தமிழகம் கட்சி சிற்றரசு தலைமையில் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.கொரான காலத்தில் தேர்வு எழுத முடியாத நிலையில் எங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்ற நிலைமையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு எழுத வைத்து எங்களின் ஆல் பாஸாக்கினார்.அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாங்கள் தற்போது அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறோம்.,மேலும் எடப்பாடி ஐயா 2ஜி நெட் டேட்டா வழங்கியுள்ளார். இதேபோல் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நீட் தேர்வில் இருந்து விளக்கும் வகையில் ஏற்பாடு செய்ததற்கும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாக கூறி இருப்பதால் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என மாணவர்கள் கூறினர்அதிமுகவிற்கு ஆதரவளித்து இணைந்த மாணவர்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வசித்து வரும் முதல் வாக்காளர்கள் என்பது குறிப்பிடதக்கது.தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக் கடன் ரத்து,இலவச டேட்டா உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கும் விதமாக வருகிற தேர்தலில் அதிமுக அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எடப்பாடி எங்கள் தலைவரு எங்களுக்கு இல்லை அரியருஎன்ற வாசகத்தில் இல்லை என்பதற்கு பதில் இஎழுத்தை தவறாக எழுதியுள்ள்னர்.எடப்பாடி ஐயா எங்களுக்கு கெத்து அதிமுக எங்கள் சொத்து என்ற பதாகைகளுடன் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் . ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.