கொரான இரண்டாவது அலை பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கொரான இரண்டாவது அலை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.தமிழகத்தில் பரவும் குரவன் இரண்டாவது அலை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் பாபு ஆலோசனையின் பேரில் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் தீவிர சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.உணவுவிடுதிகள், தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிரடியாக நுழைந்து கட்டாயமாக முக கவசம் அணிய அவர்களை எச்சரித்து2வது முறையா (முக கவசம்,)மாஸ்க் அணியவில்லை என்றால் தண்டணை தொகை வசூல் செய்யப்படும் என அறிவுறுத்தின் .பின்னர் கைகளை கழுவுவது போன்ற வற்றை அறிவுறுத்தியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.திரு நகர் அருகே அரசு பேருந்து சென்றபோது அதனை நிறுத்தி சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிய வலியுறுத்தியும் முக கவசம் அணியாத மாணவர்களிடம் எச்சரித்து அனுப்பினர்.முதல் தடவை என்பதால் எச்சரிக்கை என்றும் இரண்டாவது தடவை என்றால் தண்டனைத் தொகை கண்டிப்பாக கட்ட வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பினார்!கொரோனா வின் இரண்டாவது அலை பரவல் காரணமாக சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!