சாலையோரம் நின்றிருந்த பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி விபத்து.

சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கிராமத்தில் நேற்று காலை தலைமையிட வன திட்ட அலுவலர் அசோக் குமார் தலைமையில் பறக்கும் படையினர் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சிவகங்கையில். இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த நகரப் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த உதவி சிறப்பு ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் மீதும் மோதியது,.இதில் காவலர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் உதவி சிறப்பு ஆய்வாளர் கர்ணன் உயிரிழந்தார்.படுகாயமடைந்த காவலர்கள் சாந்தகுமார், பாலசுப்பிரமணியன் இருவரும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் பாலசுப்ரமணி என்ற காவல்துறை உயிரிழந்தார் .விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சாத்தரசன் கோட்டையை சேர்நத குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!