திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் சுந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளை, டாக்டர் அம்பேத்கர், காமராஜர், பேரறிஞர் அண்ணா, மதர் தெராசா, முத்துராமலிங்கதேவர், காயிதேமில்லத் ஆகியோர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்சுதந்திர போராட்ட தியாகிகள் பெரும் தலைவர்களை அதற்காக அதிமுகவிற்காக வாக்கு சேகரித்த விதம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா பசுமலை, தியாகராஜர் காலனி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.இந்நிலையில் அதிமுகவின் கலை இலக்கிய அணி பிரிவு செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நாடக நடிகர்களை மதர் தெராசா, முத்துராமலிங்கத்தேவர், காயிதேமில்லத், பேரறிஞர் அண்ணா. எம்ஜிஆர், ஜெயலலிதா .டாக்டர் அம்பேத்கர், வ.உசிதம்பரம் . காமராஜர் ஆகியோர் வேடமணிந்த நடிகர்களைக் கொண்டு அதிமுகவிற்கு வாக்குகள் சேகரித்தனர். வேட்பாளர் வரும்வரை இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தவர்கள் வேட்பாளர் வந்ததும் அவருடன் இணைந்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.காயிதே மில்லத் குரானையும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பகவத் கீதை புத்தகத்தையும், மதர் தெராசா பைபிளையும்வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிடம் வழங்கி வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர்.அதிமுகவின் திடீர் பிரச்சார உத்தி திருப்பரங்குன்றம் தொகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுளமேற்கொண்டனர்.. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முதன்மை கோபுரம் பக்கவாட்டில் இருபுறமும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஆறு சிலிண்டர்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருப்பதை முன்னோட்டமாக மிகப்பெரிய சிலிண்டர் வடிவமைப்பை ஏற்படுத்தி மக்களிடையே உற்சாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!