உருக்கமான பேச்சால் வாக்காளர்களை நெகிழ வைக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி அ ம முக வேட்பாளர் .

எனது தந்தை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துஇருமுறை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று ஏராளமான பணிகளை செய்தது போல் இளைஞரான எனக்கு வாய்ப்ப ளியுங்கள்.- அம முக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரைசட்டமன்றத்திற்கு அனுப்பி தொகுதி வளர்ச்சியை மேற்கொள்ள வழி செய்யுங்கள்.திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரை சிலைமான் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரை சிலைமான், புளியங்குளம், எல். கே .டி நகர் ,விரகனூர் கல்லம்பல் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.திருப்பரங்குன்றம் தொகுதியில் பத்தாண்டுகளாக வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை.சாலை வசதிகள். சாக்கடை வசதிகள். குடிநீர் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வில்லை.ஆனால் இலவசத் திட்டங்களை கொண்டு வந்து ஐந்தரை லட்சம் கோடி ரூபாயை தமிழக அரசு கடன் வைத்துள்ளது.இதனால் எந்தவித திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் .இலவசத் திட்டங்களை நம்பாமல் அம்மா பொருளாதார திட்டத்தின் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு ,தொழில் கூடம், நெசவாளர்களுக்கான உற்பத்தி பொருட்கள் கொள்முதல் கூட்டுறவு மூலம் செயல்படுத்த உள்ளோம் .முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றிய எனது தந்தை காளிமுத்துவின் மகனாக உங்களிடம் வந்துள்ளேன்.ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் இருமுறை வெற்றி பெற்று தொகுதி கான பல்வேறு உட்கட்டமைப்புகளைசெய்தவர் ஆகையால் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வரும் 6.4 .21 நடைபெற உள்ள தேர்தல் நாளான்று குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!