மதுரை திருமங்கலம் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் பரப்புரை மேற்கொண்டார்அப்போது அவர் பேசியபோது அமைச்சர் உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் நடித்து வருகிறார் ஆனால் திமுக வேட்பாளர் மணிமாறன் உழைக்க வந்துள்ளார் என குறிப்பிட்டார்.அதிமுக வேட்பாளர் உதயகுமார் மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.அப்போது உதயகுமார் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் வாக்கு மட்டும் உதயசூரியனுக்கு போடுங்கள் என கூறினார்.மக்களைக் மணிக்கணக்கில் காக்க வைத்து அடிமை செய்வதே அவருடைய நோக்கு என்றும் குறிப்பிட்டார் தொடர்ந்து அவர் திமுகவிற்கு வாக்களியுங்கள் நாம் விடியலை நோக்கி செல்வோம் என கூறினார்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.