செங்கத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியில் வரவேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால், செங்கம் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் செங்கம் நகரில் யாரும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது. அப்படி வருபவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கவேண்டுமென பேரூராட்சிப் பணியாளா்களுக்குஅதன்படி, நகரில் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் பணியாளா்கள் பேரூராட்சிக்குட்பட்ட இடங்களில் நின்று முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முகக் கவசம் அணியவேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!