திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் 37 மனுதாக்கல்செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மெத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.அரசியல் கட்சி மற்றும் மாற்று வேட்பாளர் சார்ந்து 18பேரும், 19 பேர் சுயேட்சையாகவும்,மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் விவரம்:12.03.2021 முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி 19.03.2021 நேற்று பகல் 3 வரை நடைபெற்றதுஅரசியல் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மொத்தம்:21சுயச்சை: வேட்பாளர்கள் :16 பேர்மொத்தம் மனுக்கள் தாக்கல் :37திருப்பரங்குன்றம் தொடுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள்:30 பேர்இதில் 5 பெண் வேட்பாளர்கள்.இருவர் மாற்று வேட்பாளர்கள்தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுகள்:37 (மாற்று வேட்பு மனு உள்பட) வரும் 21ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அதன் பின் வரும் 22ஆம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.