அகில பாரத இந்து மகா சபையை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் .


அகில பாரத இந்து மகாசபை தேசிய தலைவர் முன்னகுமார் சர்மா மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது அகில பாரத இந்து மகாசபை பரந்து விரிந்து அதிக நிர்வாகிகள் கொண்ட ஒரு மாபெரும் கட்சி என்றும் எங்களது கட்சி சார்பில் இந்த தேர்தலில் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவும் இல்லை,எந்த மாநிலத்திலும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை இருந்தபோதிலும் எங்கள் அமைப்பின் பெயரைச் சொல்லி சிலர் தவறுதலாக சில கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது போன்றும் விளம்பரம் செய்து வருகின்றனர் எனவே அவ்வாறு தவறுதலாக எங்களது அமைப்பின் பெயரை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் இதனை மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் யாரையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.மேலும் இந்து ஆலய சொத்துக்களை தவறுதலாக பயன்படுத்துவோர் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்து ஆலய சொத்துக்களை மீட்டெடுக்க எங்கள் அமைப்பின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்க ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது தேசிய துணைத் தலைவர் செல்வி விஜய்,மாநிலச் செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ரவிகிருஷ்ணா, வெங்கடேசன், வினோத் குமார்,கங்காதரன், உள்பட பலர் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!