திருப்பரங்குன்றம் கோவிலில் ஓராண்டு கொரானா தொற்று தடைக்கு பிறகு மீண்டும் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று காலையில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற மார்ச் 30-ந்தேதி பட்டாபிஷேகம், 31-ம்தேதி திருக்கல்யாணம்,ஏப்ரல் 1 ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஓவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா இன்று 4-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.சென்ற வருடம் கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது உள் பூஜை மட்டுமே நடைபெற்று வந்தது

கோவிலில் ஓர் ஆண்டுகள் கழித்து பங்குனி திருவிழாவின் முதல் நாளான நேற்று மார்ச் 18-ந்தேதி காலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க இருப்பிடத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.இதனைதொடர்ந்து சுவாமி அருள்பார்வையில் தங்கமூலாம் பூசப்பட்ட கம்பத்தில் மேளதாளங்கள் முழங்க பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மகா அபிஷேகமும் தீப தூப ஆராதனையும் நடந்தது. முன்னதாக கொடியேற்றப்பட்டது.திருவிழாவையொட்டி காலையிலும் இரவிலுமாக தினமும் ஒருவாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 30ம்-ந்தேதி முருகப்பெருமானுக்|கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி சுப்பிரமணிய ஸ்வாமி – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக .இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுகின்றனர். திருவிழாவின் முத்தாய்ப்பாக ஏப்ரல் 1-ந்தேதி மலையை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேரோட்டம் நடைபெறுகிறது.கடந்த வருடம் குருநாதன் காரணமாக திருக்கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!