சோழவந்தான் அரசஞ் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி மாணவர்களுக்கான தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது சோழவந்தான் பேரூராட்சி மேலக்கால் கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது முகாமில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜுலான் பானு தலைமை வகிததார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ் பாண்டியன் டெங்கு மற்றும் கொரானா நோய் தடுப்பு மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுவது அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார் இதில் பேரூராட்சி தூய்மை மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா தலைமை ஆசிரியர் ஜோஸ்வா ஜெய கம்பீரம் சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாண சுந்தரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.