மதுரை மேலப்பொன்னகரம் 3 வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார். இவர் மதுரை காந்தி மியூசியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தைஒன்றும் உள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினர் பேசாமல் விரோதத்தோடு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சொத்தை பிரித்து தரக்கோரி ஜெயக்குமார் தனது குடும்பத்தினர் மீது மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தி வந்த நிலையில், நேற்று வழக்கம் போல ஜெயக்குமார் பணிக்கு சென்று விட வீட்டுத்திண்ணையில் தீபலெட்சுமி அமர்ந்திருந்துள்ளார். இந்நிலையில் சொத்துப்பிரச்சனையை மனதில் வைத்து திண்ணையில் அமர்ந்திருந்த தீபலெட்சுமியை ஜெயக்குமாரின் உறவினர்களான முத்து, கணேஷ்குமார், உதயகுமார், காமாட்சி, சுபா ஆகியோர் கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கணேஷ்குமார் என்பவர் கொதித்துக்கொண்டிருந்த சூடான நீரை தீபலெட்சுமி முகத்தில் கொட்டியதால் படுகாயமடைந்த தீபலெட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தீபலெட்சுமியின் உறவினர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உறவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தம்பியின் மனைவி மீது அண்ணன் சொத்து தகராறில் சுடு தண்ணீரை ஊற்றும் காட்சிகள் அவர்கள் வீட்டின் எதிரே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.