அவனியாபுரத்தில்பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி.

மதுரை அருகே நல்லூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மகன் பழனியாண்டி 29. இவர் சம்பவத்தன்று அவனியாபுரம்வெள்ளக்கல் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரைதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சையில் இருந்தபோது காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல்ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துஅண்ணன் வீரணன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!