புதிய வாகனம் பதிவு செய்யப்பட்டு மற்றும் எச்பி கேன்சல் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஆர்சி புக் கிடைக்காமல் காத்துக்கிடக்கும் வாகன ஓட்டிகள் .

மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு மதுரை தெற்கு மதுரை சென்ட்ரல் திருமங்கலம் மேலூர் உசிலம்பட்டி வாடிப்பட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினசரி 200க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது மேலும் கடன் ரத்து செய்யப்படும் வாகனங்களும் தினசரி சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது இதற்கு தற்போது டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்சி புக் வழங்கப்படுகிறது கடந்த சில நாட்களாக பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்களுக்கும் மற்றும் ஹெச்பி கேன்சல் வாகனங்களுக்கும் பழைய பேப்பர் ஆர்சி புக் க்கு பதிலாக டிஜிட்டல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்மார்ட் கார்டு தட்டுப்பாட்டில் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் வாடகை வாகனம் ஓட்டும் புதிய வாகனம் பதிவு செய்தவர்களுக்கு ஆர்சி புக் கிடைக்காததால் வாகனம் எடுத்தும் பதிவு செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ஸ்மார்ட் கார்ட் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது தட்டுப்பாடு நீங்கி உடனடியாக ஸ்மார்ட் கார்டு கிடைக்குமா எதிர்பார்ப்புடன் வாகன ஓட்டிகள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!