பேச்சியம்மன்கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அய்யப்பனை மாற்றகோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன்கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அய்யப்பனை மாற்றகோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 06ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவத்து தேர்தல் பிரத்சாரத்தை தொடங்கியுள்ளனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே நக்கலப்;பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுரக்காப்பட்டி, பேச்சியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி அங்கன்வாடி கட்டிடம் முன்பு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் அய்யப்பன் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளராக யாரைவேண்டாலும் நிறுத்தலாம் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!